உதிரும் மௌனம்

uthirum mounam wrapperஆசிரியர் : சந்திரா மனோகரன் 

பதிப்பு: 2013

பக்கங்கள்: 144

பிரிவு: ஹைக்கூ

விலை: ரூ.100

முகவரி:

ஓவியா பதிப்பகம்,
17-16-5A, கே. கே. நகர்,
வத்தலகுண்டு – 624 202,
தமிழ்நாடு, இந்தியா.

 

Advertisements

பூப்பதெல்லாம்..

ஆசிரியர் : விமலன் Poopethellaam wrapper

 பதிப்பு: 2013

பக்கங்கள்: 144

பிரிவு: சிறுகதை

விலை: ரூ.90

முகவரி:

ஓவியா பதிப்பகம்,
17-16-5A, கே. கே. நகர்,
வத்தலகுண்டு – 624 202, தமிழ்நாடு, இந்தியா.

 

இயன்முறை மருத்துவம்

ஆசிரியர் : தி. செந்தில்குமார் 

Iyanmurai Maruththuvam

பதிப்பு: 2013

பக்கங்கள்: 144

பிரிவு: ‘பிசியோதெரபி’ மருத்துவ நூல்

விலை: ரூ.90/-

முகவரி:
ஓவியா பதிப்பகம்,
17-16-5A, கே. கே. நகர்,
வத்தலகுண்டு – 624 202,
தமிழ்நாடு, இந்தியா.

‘இயன்முறை மருத்துவம்’ (PHYSIOTHERAPY) என்றால் என்ன?  என்ற கேள்விக்குரிய விளக்கமான விடையாக இந்த நூல் மலர்துள்ளது. அள்ள அள்ளக் குறையாத அறிவியல்பூர்வத் தகவல்கள், மற்றும் இலக்கிய நயமிக்க பண்பட்ட சொற்களைக்கொண்டு இந்நூல் செதுக்கப் பட்டுள்ளது.

மலேசியாவில் ஆசியா மெட்ரோபொலிடன் பல்கலைக் கழகத்தில் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வரும் இயன்முறை மருத்துவர் தி. செந்தில்குமார் B.P.T., M.P.T., அவர்களின்  பயன்மிகு படைப்பு இது.

நூலாசிரியர் செந்தில்குமார் ஆழமான சமூகப் பார்வையும், சமூகநலச் சிந்தனைகளும், மனிதநேயமும் நிறைந்த இயன்முறை மருத்துவராய் – மருத்துவ எழுத்தாளராய் இருப்பதால் நவீன வாழ்வியல் நடைமுறைகளின் ஆபத்துகளை அடுக்கடுக்காய் குறிப்பிட்டு எச்சரிக்கிறார்.

இந்நூலில் “CEREBRAL PALSY’ எனப்படும்  பெருமூளை வாதம் முதல் “PEDAL OEDEMA” எனப்படும் பாதவீக்கம் வரை.. கழுத்து வலி, முதுகு வலி, சுளுக்கு, நரம்பு வலி என எல்லாவித உடலியக்க பிரச்சனைகளுக்கும் இயன்முறை மருத்துவ சிகிச்சைகளின் தேவை, பயன்பாடுகள் பற்றிய, அரிய விபரங்கள் எளிய நடையில் தொகுக்கப் பட்டுள்ளன.

தசை சிதைவு (MUSCULAR DYSTROPHY) போன்ற கொடிய நோயினால் ஏற்படும் மரணத்தைக் கூட தள்ளிப்போட முடியும் என்கிறது இயன்முறை மருத்துவம்.

மூளை வாதமுள்ள மற்றும் மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் மூலம் மறு வாழ்வுச் சிகிச்சைகள் அளிக்க முடியும் என்கிறது இயன்முறை மருத்துவம்.

நோய்களற்ற குடும்பம், நோய்களற்ற சமுதாயம், நோய்களற்ற தேசம், நோய்களற்ற உலகம் அமைய இயன்முறை மருத்துவம் உறுதுணை புரியும். இந்நூலின் வாயிலாக இயன்முறை மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு பரவட்டும்! இந்நூலின் சமூகப் பயன்பாட்டைக் கருத்திற் கொண்டால்.. ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும். பள்ளி, கல்லூரி நூலகங்களிலும், அரசு நூலகங்களிலும் இந்நூல் இடம்பெற வேண்டும்.

Dr. S. வெங்கடாசலம் M.D. (A.M.) 
RHMP., RAMP., MDipMR., DNYS., DIAT., DSA., 
ஆசிரியம், ‘மாற்று மருத்துவம்’ மாதஇதழ்.

சிறகு முளைத்த பூக்கள்

Siraku mulaiththa Pookkal

ஆசிரியர் : கவிவாணன் 

பதிப்பு: 2013

பக்கங்கள்: 64

பிரிவு: ஹைக்கூ கவிதை

விலை: ரூ.60/-

முகவரி:
ஓவியா பதிப்பகம்,
அய்யம்பெருமாள் இல்லம்,
17-16-5A, கே. கே. நகர்,
வத்தலகுண்டு – 624 202,
தமிழ்நாடு, இந்தியா.

இனிய நண்பர் கவிஞர் வதிலை பிரபா அவர்களின் பதிப்புரை நன்று. அட்டைப் படங்கள்,  உள்  ஓவியங்கள், அச்சு அனைத்தும் மிக நன்று. பாராட்டுக்கள். வளரும் கவிஞர்களைத் தட்டிக் கொடுத்து வளர்த்து விடும் தாயுள்ளம் கொண்ட தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மணிமகுடமாக உள்ளது. ஓவியக் கவிஞர்  ஸ்ரீரசா அவர்களின் அணிந்துரையும் நன்று. முனைவர் ச. சரவண ஜோதி வாழ்த்துக் கவிதை நன்று. ஆசிரியர் கவிஞர் கவிவாணன் சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வரும் படைப்பாளி . ஓய்வறியா உழைப்பாளி. கவிதைகளை பிரசுரம் செய்த  இதழ்களின் பெயரை மறக்காமல்எழுதி   நன்றியைப் பதிவு செய்தது சிறப்பு. இந்த நூலினை அவரது அன்னை அ.அசரபுன்னிசா அவர்களுக்கும், ஹைக்கூ ஆய்வாளர் கவிஞர் அமரன் அவர்களுக்கும் காணிக்கை ஆக்கி உள்ளார்.

இலக்கியத்தில் இனிமையானது கவிதை. கவிதைகளில் பரவலாக பலரால் விரும்பப்படும் வடிவம் ஹைக்கூ. ஆரம்ப காலத்தில் ஹைக்கூ  கவிதையை குறை சொன்னவர்களும் ஹைக்கூ வளர்ச்சி எழுச்சி கண்டு பிரமித்து விட்டனர். 1997 முதல் இன்று வரை எழுதிய ஹைக்கூ கவிதைகள், ஹைக்கூ அந்தாதி, ஹைபுன் கவிதைகளின் தொகுப்பு இந்த நூல். சிறகு முளைத்த பூக்கள்! நூலில் தலைப்பே கவித்துவமாக உள்ளது .வித்தியாசமாக உள்ளது. பூக்களை ஒட்டி உள்ள இலைகளை சிறகுகளாகப் பார்க்கும்  கவி மனம் நன்று .பாராட்டுக்கள். நூலைப் படிக்கும் வாசகனுக்கும்  சிந்தனை  சிறகு முளைக்கும் விதமாக ஹைக்கூ உள்ளன. சிந்திக்க வைக்கின்றன. சிற்பி சிலை வடிக்கும் நுட்பத்துடன் ஹைக்கூ வடித்துள்ளார். இனிய நண்பர் நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் வேலை கிடைக்காது வருந்தும் இளைஞன் வேதனையை மிக நுட்பமாக வடித்துள்ளார் .
கரும்பும் வேம்பும் ஒன்று / கற்றவனுக்கு  / வேலை தராத அரசு!
மொட்டுகளைக் கருக்கும் விதமாக பிஞ்சுக் குழந்தைகளுக்கு புத்தகம் என்ற பெயரில் பொதி சுமக்க வைக்கும் அவலத்தை சாடும் விதமாக உள்ள ஹைக்கூ நன்று .
சிலுவை சுமந்த எசுவாய் / குனிந்தே / பள்ளி செல்லும் பையன்!
இயேசு கூட உயிர்த்து எழுந்ததாகச் சொல்வார்கள். வாடிடும் குழந்தைகள் மீண்டிட வழியே இல்லையா என்று சிந்திக்க வைக்கின்றது. கவிதை எழுதும் படைப்பாளியின் வறுமையைக் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .
தபால் செலவில் தடுக்கி  / அலமாரி இடுக்கில் விழுந்தது / மீண்டும் மீண்டும் கவிதை !
கவிதைக்கு கற்பனை அழகு .கற்பனையும் கவிதைக்கு அழகு என்பதை உணர்த்தும் ஹைக்கூ மிக நன்று .
தவறி விழுந்த / நட்சத்திரங்களா? / இருள் பள்ளத்தில் மின்மினிகள் !
கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால்  மோதிக் கொள்ளும்    ,மோதிக் கொல்லும் அவலத்தை, பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் வன்முறை விதைக்கும் மூடத்தனத்தை சாடும் விதமான ஹைக்கூ நன்று .
அன்பு வழி  மதம்  / கடவுள் சிலையில் / மனித இரத்தம்!
குஜராத்தில் நடந்த வன்முறையை கலவரத்தை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. அதனை நினைவூட்டும் விதமாக உள்ள ஹைக்கூ ஒன்று .
தீபகற்ப இந்தியாவில் / கர்ப்பிணி வயிற்றில் தீ / குஜராத்!
காதலர்களின் மனதை படம் பிடித்துக் காட்டும்  விதமாக ஹைக்கூ.

நிறையப் பேச / நினைக்கிறது மனசு / 

பிரிவின் கணத்தில் !
அன்று வெள்ளையனே வெளியேறு என்றோம் .இன்று வெள்ளையனே வருக கொளையடிக்க  வருக என்று ரத்தினக் கம்பளம் விரிக்கின்றனர் அரசியல்வாதிகளின் முகத்திரை கிழிக்கும் வண்ணம் உள்ள ஹைக்கூ .
சில்லறை வணிகம் / அன்னிய  முதலீடு / சில்லறையான அரசு !
காதலியைப் பற்றி ஒரு கவிஞனால் எழுதாமல் இருக்க முடியாது .
தாஜ்மகால் / அழகுதான் / உன்னை விடவா ?
காட்சிப்படுத்தும் நுட்பம் உணர்ந்து வடித்த ஹைக்கூ மிக  நன்று .
புல்லாங்குழலில் / வண்ணத்துப் பூச்சி / இசைக்குமோ ?
ஹைபுன் கவிதைகள் ,ஹைக்கூ அந்தாதி புதிய முயற்சி பாராட்டுக்கள் .நூல் விமர்சனத்தில் நூலில் உள்ள அனைத்தையும் குறிப்பிட முடியாது என்பதால் இத்துடன் முடிக்கிறேன் .மற்றவை வெள்ளித் திரையில் காண்க என்பதைப் போன்று மற்றவை  நூல் வாங்கிப் படித்துக் காண்க !நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன்அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். 
கவிஞர். இரா. இரவி 

WIND AND RAIN

wind and rainOriginal in Tamil by : Naaval Kumaaragesan

Translated in to English by : Pazhani Ezhilmaaran

Category : New verses

First Edition : April 2013

Pages : 112

Price : Rs. 100

Published by :
Oviya Pathippagam
17-16-5A, K.K. Nagar,
BATLAGUNDU – 642 202.
Tamil Nadu, INDIA.

Whenever there is heavy flood that destroys the life, only writing in opposite side spreads its wings as voice for the dawn, writing at present has got strength. The creating mind raises its experience and value of the society to which it belongs this collection has also been presented by registering actual observation of facts or events. Poem in the caption “Land” speaks frankly the state of village.

“Between parents
Quarrel on ridge of field,
Irrigation dispute
Not solved in Panchayat”
To bring to the conclusion of the enmity before us, no ways and means we have got, but courts.
“ Instalments
Swallowed years
In problematic land
Grown Acacia tree
In ruin”

This poem will be enough for witness for plundering by international institutions that, making us enemies and rendering barren lands.
“ Product only
By farmer
Fixation of price
By merchant”
Speaks of reason for derangement of farmer’s life. Simple words, brevity and penetrating rhythm of verse.
Naaval Kumaaragesan should rise with desirable creations for this society.

– R. PACHIAPPAN

குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும்

kuzhanthaikalum pommaikalum

ஆசிரியர் : முனைவென்றி நா சுரேஷ்குமார்

பதிப்பு: 2013

பக்கங்கள்: 64

விலை: ரூ.60/-

பிரிவு: ஹைக்கூ கவிதை

முகவரி:
ஓவியா பதிப்பகம்,
அய்யம்பெருமாள் இல்லம்,
17-16-5A, கே. கே. நகர்,
வத்தலகுண்டு – 624 202,
தமிழ்நாடு, இந்தியா.

ஒரு மின்னல் வந்து தாக்கிவிட்டுப் போகும் ஒரு பரவசம் ஹைக்கூ கவிதைகளில் காணமுடியும்.

‘குழந்தைகளின் செய்கைகளில் /
ஒளிந்திருக்கின்றன /
எழுதப்படாத கவிதைகள்’

பாசாங்கு இல்லாத இயல்பான மனதை ஹைகூவாக வடித் திருக்கிறார் சுரேஷ்குமார். குழந்தைகளுடனான நம் வாழ்வை, குழந்தைகளோடு கழிக்கிற நம் ஒவ்வொரு கணங்களையும் இவை நினைவூட்டுகின்றன.

நம் கண்ணுக்குப் புலப்படாத பல்வேறு காட்சியமைப்புகளை குழந்தைகள், பொம்மைகள், கடவுள்கள்  என்ற பாடு பொருள்களை நம்முன் படிமங்களாக நிலைநிறுத்தும் கவிஞரின் முயற்சியும் தெரிகிறது                                                                                                                                                                                    – குமுதம்

 

The Last Drop of Drizzle

Drizz.e

Original in Tamil by : Chandra Manokaran

Translated in to English by : Pazhani Ezhilmaaran

Category : New verses

First Edition : July 2012

Pages : 144

Price : Rs. 100

Published by :
Oviya Pathippagam
17-16-5A, K.K. Nagar,
BATLAGUNDU – 642 202.
Tamil Nadu, INDIA.

The translated work of Pazhani Ezhilmaaran the poem of  ‘Chandra Manoharan’ written in Tamil. It  speaks volumes of his subject ability and knowledge of both Tamil and English. I am at a loss for words to describe translating anything written in other regional languages in to English on the part of a translator. It is a difficult task. This task not apt for all those who well known the rules and regulations only will achieve this field. This is an art. It’s a complicated one .

He translated very well in the universal language. He has a good command on English verses. Each and every diction likes a spear. Love there parted.. poems are totally differ from his work. This task has comprised with beauty world, truth, love and death etc.

Poetic lines are arranged in a beautiful manner. Every man has different thought. In different way the poet visualizes it the sculpture made statue. Painter painted the picture. But the poet only writes poem every specialist has it own fame. It has own language and Efforts.

At the edge of a word, our life ”was a poem the poet and the lady lover will start their dialogue.” Some over flowing remem- brances with in a word will comprise, ‘some sweet memories never End. Lif

e was constructed by hope. Hope is very important to life. To notify that those who has been loving hope’ is essential. This was occurred in ‘Elusion of flowers of the desert.’ The reader and fans also has sweet love memorises.

A person has been loved by lady lover. Automatically, that person became a poet. Whatever scribed in his paper that thing become a poem. He does not seem to belong to our ordinary world. In the world of romance people fall in “love at first sight.”

Your fire eyes burn in my lears. “In your discharging eyes, scattering sans bound shines, your eyes shedding fire flames, As un uneqalled and imperishable” are recalls our  teenage life.

Amicable lines are readable. The poem has ever lived in our hearts. Natural fate the sun is found of the lotus. Even nature has above. That’s why the sun is facing towards the lotus in the field ‘seeking of a traveler’ is expressed same ideas. Expressed the lovers external feelings. Such a work is done needs appreci

ation and encouragement, only most who well versed both in their regional and English languages have ability to translate with neatness and perfection ‘may the god shower his eternal blessings on him to engrave his name in the field of translation.

Chandra Monoharan is a very good poet. He is also well known journalist of revolution ‘Sigaram’ of Erode. Naturally he is very good manners and Human tendency. Literature is nothing, but the refections o

f human feelings. A poet is the who drives deep in to the fathom of human feelings and human emotions. In this manner Chandra Monoharan is real poet .

I whole heartedly congratulate our poet Chandra Manoharan.

– Dr. MITRA

Pilgrimage to the Holy Land

pilgrimage

ஒற்றைப் பனைமரம்

ottraip panaimaram

அழகு ராட்சசி

azhagu raatsashi

ஆசிரியர் : முனைவென்றி நா சுரேஷ்குமார்

பதிப்பு: 2012

பக்கங்கள்: 64

பிரிவு: கவிதை

விலை: ரூ.60/-

முகவரி:
ஓவியா பதிப்பகம்,
அய்யம்பெருமாள் இல்லம்,
17-16-5A, கே. கே. நகர்,
வத்தலகுண்டு – 624 202,
தமிழ்நாடு, இந்தியா.

கவிதைகள் அனைத்தும் காதல் மாளிகையை வார்த்தை கற்களால் கட்டி எழுப்பி இருக்கிறார் கவிஞர். பேச்சு வழக்குச் சொல்லை பயன்படுத்திருப்பது எனக்கு நெருக்கமாக்கியது. நூல் பற்றி அவர் எழுதியிருக்கிற உவமம் அசைக்கிறது இதயத்தை.

“அவள்
எங்களை அணிந்து கொள்ள மறுக்கிறாள் என
உன் மேல் புகார் செய்தன
உன் சிறுவயதாடைகள்,
அவள் பெரிய குழந்தை ஆகிவிட்டாள்
அவளால்
உங்களை
அணிந்து கொள்ள முடியாது என்றேன்
அவ்வளவுதான் கன்னத்தில்
கைவைத்தபடி கதறி அழ ஆரம்பித்துவிட்டன
உன் சிறு வயது ஆடைகள் அனைத்தும்.”
என்று கவிஞரின் கவித்துவம் பார்வை அழகியலாய் பேசிக்கொண்டு நீள்கிறது கவிதை நூல் எங்கும்,
“தங்களின் உடல் அங்கங்களை
உடைநாகரீகம் என்கிற பெயரில்
கடைவிரித்துக்காட்டும்
பெண்கள் வாழும் நாட்டில்
உன் அழகையெல்லாம் மறைப்பதற்காகவே
சேலை சுடிதார் அணிந்து வருகிறாய் நீ”
கவிதையில் சமூக அக்கறை மெலிதாய் தெரிகிறது. இப்படிச்செய்த கவிஞர்
“அனைத்து வண்ணங்களாலும்
குழைத்து செய்யப்பட்ட
வர்ணஜாலம் நீ “
என்கிறார். வண்ணங்கள் கூட்டுக்கலவை கருப்பல்லவா? அறியாமல் செய்கிறாரோ என்னவோ. படைப்புகளில் பாசத்த கொட்டிருக்கார், வரும் காலங்களில் நூல்களின் சாரம் சமூகச்சிந்தனைகுறித்திருக்க அடியேனின் வாழ்த்துக்கள்.

வாலிதாசன்